Site icon Tamil News

கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ஊராட்சி பொது நிதியின் கீழ் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பட்டுள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள தெருமுனையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து மாத்தூர் ஊராட்சி தலைவர் கோபி ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஆறாவது வார்டு கவுன்சிலர் மோகன், இரண்டாவது வார்டு கவுன்சிலர் லதா என்பவரின் கணவர் மனோகரன் ஆகிய இருவரும் கட்டை , இரும்பு ஆயுதத்தால் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் ஒப்பந்த பணியை தங்களுக்கு வழங்குமாறு தலைவரிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் ஒப்பந்த பணியை தங்களுக்கு வழங்காமல் தலைவரின் உறவினர் ஒருவருக்கு அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முறையான டெண்டர் விடாமல் அனைத்து ஒப்பந்த பணிகளையும் தலைவர் மற்றும் தலைவர் சார்ந்த நபர்களுக்கே வழங்குவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் தலைவர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கேமராக்களை சேதப்படுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் கைது செய்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version