Site icon Tamil News

மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் மனைவிக்கு 80 சதவிகிதம் உடல் பாதிப்பு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் சிவகுமார் என்ற கணவன் அவரது மனைவி கவிதாவின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட கவிதா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவக்குமாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரையும் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ், நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த கோவை மாநகர காவல் துணை ஆணையாளர், சந்தீஸ், பெண்ணுக்கு 80% உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறிய அவர், விசாரணைக்கு பிறகே முழு தகவல்கள் தெரிய வரும் என தெரிவித்தார். ஆசிட் வீச்சு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என தெரிவித்த அவர்,

ஆசிட்டின் தன்மை குறித்து தடயவியல் சோதனை மேற்கொண்ட பிறகே தெரிய வரும் என்றார். மேலும் அந்த ஆசிட்டை தண்ணீர் பாட்டிலில் எடுத்து வந்ததால், எளிதில் கண்டறியப்படாமல் போனதாக தெரிகிறது என்றார். மேலும் கூடுதல் விவரங்கள் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என தெரிவித்தார்.

 

Exit mobile version