Site icon Tamil News

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கபாடி போட்டி கந்தர்வக்கோட்டை திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் தமிழ் அய்யா முன்னிலையில் நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் பங்கேற்று கபாடி போட்டியை தொடங்கி வைத்தார். அவரை வரவேற்கும் விதமாக திமுகவினர் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

உடன் கந்தர்வக்கோட்டை திமுக வடக்கு ஒன்றிய நகர கழகத்தினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.முதல் நாள் கபாடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version