Site icon Tamil News

எப்.ஐ.ஆர் பதியாமல் இருக்க லஞ்சம்

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த போரின் பேரில் சுல்தான்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஜெயபிரகாஷ் புகார் அளித்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு காவல் நிலையம் வந்த பஞ்சலிங்கத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் மரியாதை குறைவாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்ட பஞ்சலிங்கம்,

தன் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருக்க சுல்தான்பேட்டை சிறப்பு காவல் உதவியாளர் ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்டதாக புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய, 4 ஆயிரம் ரூபாயை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் பஞ்சலிங்கம் கொடுத்துள்ளார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனை பிடித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லஞ்சம் வாங்கியதாக காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version