Site icon Tamil News

இந்நிலையில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பை சார்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை மனுவாக அளித்துள்ளனர்

கோவைகடந்த 37 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே தங்கள் பகுதியில் சாலைகள் போடப்பட்டுள்ளது- காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பினர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துணையானையாளர் ஷர்மிளா மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பை சார்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை மனுவாக அளித்துள்ளனர்.

இது குறித்து  அவர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் கடந்த 37 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சாலைகள் போடப்பட்டு அந்த சாலைகளும் தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும், தங்கள் பகுதியில் உள்ள 12 சாலைகளில் 4 சாலைகளுக்கு வடிகால் வசதி இல்லை எனத் தெரிவித்தனர்.

தங்கள் பகுதியில் 11 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் அதுவும் ஓரிரு மணி நேரம் மட்டுமே வேகம் இல்லாமல் விடப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை தொடந்து நிலவி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் பகுதியில் 3 ரிசர்வ் சைட்டுகளில் சமூக பயன்பாட்டிற்காக இருந்த ஒரு பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டுத் தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மூன்று மாநகராட்சி ஆணையாளரிடமும் கோரிக்கை மனுக்களை அளித்துள்ள இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version