Site icon Tamil News

காவேரி மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு

கோவிலம்பாக்கம் அருகே உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மனித சங்கலி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோவிலம்பாக்கம் அருகே ஈச்சங்காடு சிக்னலில் காவேரி மருத்துவமனை சார்பில் உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் சார்பில் மனித சங்கலி மூலம் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

இதில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு எடுத்துரைத்தனர்

விழிப்புணர்வில் நிகழ்ச்சியில் தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மருத்துவர்கள், செவிலியர்கள கைகளில் விழிப்புண்ர்வு பதாகைகளை ஏந்தி மனித சங்கலியில் ஈடுபட்டனர்.

மேலும் சிக்னலில் தலைகவசம்  அணியாமல் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளிடம், தலைகவசம் அணிவது குறித்த அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

அதிகமான சாலை விபத்துகளில் தலைகவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழிப்புகளை தடுக்கும் வகையில் இந்த விழிப்புண்ர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை ஆழ்வார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக இயங்கி வரும் காவேரி மருத்துவமனை சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை கோவிலம்பாக்கத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

Exit mobile version