Site icon Tamil News

அதிகார நந்தி சேவை 63 நாயன் திருவீதி உலா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்,
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு 24 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.00 மணி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் மூன்றாவது நாளான ஏப்ரல் 26 புதன்கிழமை நேற்று அதிகார நந்தி சேவையில் ஆட்சிஸ்வரர் இளங்கிளி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். தொடர்ந்து
63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகளுக்கு பின்னர் கோயில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க,
கைலாய வாத்தியம், நாதஸ்வர கச்சேரி, உடன் கோயிலின் அதிகார நந்தி சேவையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ ஆட்சீஸ்வரரும், இளங்கிளியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பின்னர்
63 நாயன்மார்களும் வீதி உலா வந்தனர். இதனிடையே அச்சிறுப்பாக்கம் நகரில் உள்ள
சங்கு தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு
பார்வதிதேவி பால் புகட்டும் நிகழ்வான திருமுலைப்பால் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியும் அம்மனும் தரிசனம் செய்து ஞானப்பாலை
பெற்றுச் சென்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை செங்குந்த
முதலியார் சமுதாயத்தின்
சிவபிரகாசம், தர்மன்ஆசிரியர், ஆனந்தன், ஆர்.ரவிச்சந்திரன், ரங்கப்பன், சுப்பிரமணி, ஆறுமுகம்,
செயல் அலுவலர் மேகவண்ணன்,
உட்பட விழா குழுவினர்
சிறப்பாக செய்திருந்தனர்.
அதன் பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பான
அன்னதானமும் வழங்கப்பட்டது.

Exit mobile version