Site icon Tamil News

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவ சிலை திறப்பு

1991ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ராஜீவ் காந்தி நினைவகம் அமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு தலைவர்கள் தமிழகம் வரும்பொழுது பொதுவாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவகத்திற்கு வருகைதந்து மலர் தூவிஅஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸில் புதிதாக பதவி ஏற்றுள்ள தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை புரிந்து ராஜீவ் காந்தி நினைவகம் நுழைவாயில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பாரதபிரதமர் இந்திரா காந்தி திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி, புனித நீரை ஊற்றி கண்ணை மூடி மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகம் அருகில்  அமர்ந்து புஷ்பாஞ்சலி இன்னிசை நிகழ்ச்சியை கேட்டவாறு 10 நிமிடம் அமர்ந்தார்.

பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.அவருடன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version