Site icon Tamil News

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் 2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று ) முதல் மேற்கொள்ள முடியும்.

இதனை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 6 மணி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version