Site icon Tamil News

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி எரிபொருள் துறையில் ஏற்றுமதி, சேமிப்பு, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அதற்காக  தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள்  அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள அம்பாந்தோட்டையில் பிரதான வலுசக்தி மையத்தை சுத்திகரிப்பு நிலையத்துடன் நிர்மாணிக்கத் தேவையான முழு முதலீட்டையும் தமது நிறுவனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் நாட்டின் அபிலாஷைகளின் அடிப்படையில் உரிய அழைப்புகளுக்குப் பங்கேற்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

Exit mobile version