Site icon Tamil News

இலங்கைக்கு பெருந்தொகை பணம் வழங்கும் உலக வங்கி

இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையானது அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம், இலங்கையில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version