Site icon Tamil News

இலங்கையில் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கை

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும்  பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தேசிய தேசிய பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் காட்டுகிறது.

2022 ஆம் ஆண்டில் 604 பேர் கண்டறியப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டளவில் 690 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேசிய பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஜனக வேராகொட தெரிவித்தார்.

இது பதினைந்து வீத அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இந்த நோய்கள் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுவதாகவும், பதிவாகியுள்ள பெரும்பாலானோர் 29 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற உடலுறவின் போது கருத்தடைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் தயக்கம் காட்டுவது இவ்வாறான நோயாளிகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர் போதைப்பொருளைப் பயன்படுத்தி குழுக்களாகப் பாலுறவில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆணுறைகளைப் பயன்படுத்தாததால், பால்வினை நோய்கள் அதிகமாகப் பரவக்கூடும் என்றும் நிபுணர் மேலும் கூறினார்.

Exit mobile version