Site icon Tamil News

ஸ்பெயினில் பிரபல ஹாலிவுட் நடிகர் என கூறி ஏமாற்றப்பட்ட பெண்கள் – 325,000 யூரோ இழப்பு

ஸ்பெயினில் பிரபல ஹாலிவுட் நடிகர் Brad Pitt என கூறி இரு பெண்களை ஏமாற்றியதாக நம்பப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மோசடிக்காரர்களிடம் இரு பெண்களும் 325,000 யூரோவை இழந்தனர். Brad Pitt ரசிகர்களுக்கான பக்கம் மூலம் சந்தேக நபர்கள் அந்தப் பெண்களைத் தொடர்பு கொண்டனர்.

மோசடிக்காரர்கள் இணையம், WhatsApp செய்திகள் ஆகியவை மூலம் அவரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்ததாக ஸ்பெயின் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் இரண்டு பெண்களையும் போலி முதலீட்டுத் திட்டங்களில் பணம் போடுமாறு பரிந்துரைத்தனர்.

சந்தேக நபர்கள் அண்டலூசியா பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் ஐந்து வீடுகளில் சோதனை நடத்தியதில் பல்வேறு கைத்தொலைபேசிகள், வங்கி அட்டைகள், இரு கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் இழந்த பணத்தில் 85,000 யூரோவை அதிகாரிகள் மீட்டனர்.

Exit mobile version