Site icon Tamil News

முதல் முறையாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த வில்லியம்சன்

நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் வில்லியம்சன் 0 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஸ்டார்க் ஓவரில் மிட் ஆப் திசையில் அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க வில்லியம்சன் ஓடிய போது எதிரே ஓடி வந்த யங் மீது மோதினார்.

இதனால் இருவரும் நடுபிட்சில் இருக்கும் போது ஆஸ்திரேலிய வீரர் லெபுசன் நேரடியாக ஸ்டெம்பில் அடித்தார்.

இந்த ரன் அவுட் மூலம் அவரது 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வில்லியம்சன் ரன் அவுட் ஆகி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version