Site icon Tamil News

ஓராண்டுக்குப் பிறகு களம் இறங்கிய தனுஷ்கா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்

சுமார் ஒரு வருட காலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (23) SSC விளையாட்டுக் கழகத்திற்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

ஆனால் அங்கு தனுஷ்கா 10 ஓட்டங்களையே பெற முடிந்தது. தனுஷ்க குணதிலகா கடைசியாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

SSC விளையாட்டுக் கழகத்தின் ஒழுக்காற்றுக் குழுவினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதன் பின்னர், SSC விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் இன்று முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றினார்.

SSC விளையாட்டுக் கழகத்திற்கும் நுகேகொட விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற SSC விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி இன்னிங்ஸை ஆரம்பித்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தனுஷ்க குணதிலக 21 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ஓட்டங்கள் எடுத்தார். போட்டியைக் காண தனுஷ்க குணதிலக்கவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

SSC விளையாட்டுக் கழகம் 41 ஓவர்கள் 5 பந்துகளில் 152 ஓட்டங்களைப் பெற்றது. நுவனிந்து பெர்னாண்டோ 50 ஓட்டங்களைப் பெற்றார்.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய நுகேகொட விளையாட்டுக் கழகம் 37 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றது.

மோசமான வெளிச்சம் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதுடன், SSC விளையாட்டுக் கழகம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Exit mobile version