Site icon Tamil News

இலங்கையில் மீண்டும் தொடர்குண்டு தாக்குதல் நடத்தப்படுமா? : வெளியான தகவலால் அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற தகவல் நேற்று (05.10) வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என  பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில்அறிவித்துள்ளது.

சிறைக்காவலர் ஒருவரால் சிறைச்சாலை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட மரத்துண்டு ஒன்றின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

அதனை பரிசீலித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதற்மைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் உள்ள பிரதான ஆலயங்கள் மீது தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையை மீளப்பெறுமாறும் அந்த பிரிவு  வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version