Site icon Tamil News

சாந்தன் ஏன் சந்தனமானார்?

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் , கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு , திருச்சி சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் கடந்த மாதம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார்.

அவரின் நினைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நிகழ்வில் மதகுருமார்கள் , அரசியல்வாதிகள் , மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள், சொற்செற்செல்வர் ஆறுதிருமுருகன் உள்ளிட்ட மதத்தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சாந்தனின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் அவரது திருவுருவப்படம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், புத்தகப் பைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version