Site icon Tamil News

WhatsApp இனி பிறந்த திகதியையும் பதிவு செய்ய வேண்டும்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது பல்வோறு நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப வாட்ஸ்அப்-ஐ பாதுகாப்பான செயலியாக மாற்றும் வகையில், பயனர்கள் தங்கள் செயலி பயன்படுத்தும் முன் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இருப்பினும் இது தற்போது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது.

WeBetainfo தகவல்படி, டெக்சாஸ் போன்ற பல்வேறு அமெரிக்க மாநிலங்களில் சமீபத்திய சட்ட மாற்றங்களுக்கு இணங்க இது செய்யப்படுகிறது. அந்த நாட்டில் உள்ளவர்கள் எந்த ஆன்லைன் சேவையையும் பயன்படுத்தத் தொடங்கும் முன் தங்கள் வயதை செயலியில் பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டம் உள்ளது.

அதன்படி, தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் இது தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்கும் பாப்-அப் மெசேஜ் செயலியில் காண்பிக்கும். சமீபத்திய சட்ட விதிமுறைகளின் கீழ் இந்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வயதை அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் 15 வயதாக நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, நீங்கள் சரியான வயதை உள்ளிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் அந்தத் தரவை மீண்டும் திருத்தவோ மாற்றவோ முடியாது.

இருப்பினும் இந்த தரவுகள் பிறந்த தேதி தரவுகள் எதுவும் யாருக்கும் காண்பிக்கப்படாது. இது ஒழுங்குமுறைத் தேவைகளுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. பயனர்களின் தனியுரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் உறுதியளிக்கிறது. பாதுகாப்பு அம்சம் என்பதல், இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளிலும் கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version