Site icon Tamil News

கருநாக்கு இருப்பதற்கான காரணம் என்ன?

நமக்கு பல நோய்களை அடையாளம் காட்டுவது நாக்கு தான். அதனால்தான் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர் முதலில் நாக்கை நீட்ட சொல்கிறாரர் . நாக்கின் ஒவ்வொரு நிறத்திற்கும் பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதை உறுதி படுத்தும் வகையில் டாக்டர் கார்த்திகேயன் தனது யூட் யூப் பக்கத்தில் நாக்கின் நிறத்தைப் பற்றி விளக்கியுள்ளார்.

நாக்கானது நம் சாப்பிடும் உணவின் சுவையை அறிவதற்கு மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படும் நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்துகிறது. அதிலும் பலரும் பருமனாக இருப்பதற்கு நாக்கும் ஒரு காரணம்தான். ஏனென்றால் நாக்கு தான் நமக்கு பிடித்த உணவுகளை உண்ணும் போது மூளைக்கு சிக்னலை அனுப்புகிறது இதன் மூலம் அதிகமான உணவு உட்கொண்டு அதன் விளைவாக உடல் பருமனும் ஏற்படுகிறது.

நாக்கின் பகுதிகளும்.. அதன் சுவைகளும்..
நாக்கின் நுனிப்பகுதியானது இனிப்பு சுவையை உணரச் செய்கிறது. நாக்கின் இருபக்க ஓர பகுதிகள் புளிப்பு சுவையை உணருகிறது. நாக்கின் அடிப்பகுதியானது கசப்பு சுவையை உணரச் செய்கிறது .மேலும் நாக்கின் நடுப்பகுதியானது எண்ணெய் பதார்த்தங்களின் சுவையாய் உணர செய்கிறது. நாக்கின் நுனி ஓரப் பகுதியானது உப்பு சுவையை உணரச் செய்கிறது. பொதுவாகவே நம் நாக்கின் நிறம் வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு மாறாக இருந்தால் சில அறிகுறிகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிளந்த நாக்கு;

உடல் வயோதிக நிலைக்கு சென்றதை குறிப்பதற்கு , தொற்றுக்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பதாகும்.

ஸ்ட்ராபெரி நாக்கு;

நாக்கு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் காணப்பட்டால் அது வைட்டமின் பி12, வைட்டமின் பி3 மற்றும் இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் சூடான உணவு பொருட்களை உட்கொண்டாலும் ,காரமான உணவுகளை உட்கொண்டாலும் இந்த நிறத்தில் காணப்படும் .

வெள்ளை நாக்கு;

வெள்ளை நாக்கு ஈஸ்ட் தொற்று, எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மாறுபாடு , அதிகமாக மாத்திரைகள் உட்கொள்வது போன்ற காரணங்களால் வெள்ளை நாக்கு காணப்படுகிறது.

கருநாக்கு;

சிலருக்கு இயற்கையாகவே நாக்கில் சிறு சிறு முடிகள் இருப்பது கரு நிறத்தில் காணப்படுகிறது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகின்றார். மேலும் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி வைரசால் கூட கருப்பு நாக்கு இருக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்துகின்றார். அது மட்டுமல்லாமல் வயிறு எரிச்சலுக்காக உட்கொள்ளப்படும் மருந்துகளில் பிஸ்மத் இருக்கும், வாயில் உள்ள பாக்ட்டீரியவுடன் சேரும்போது கருப்பு நிறத்தில் மாறும் என்றும் மருத்துவர் கூறுகின்றார்.

நாக்கு எரிச்சல்;

வயிற்றில் அசிடிட்டி ,நரம்பு பாதிப்புகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் அண்ணாச்சி பழம் சாப்பிட்டாலும் நாக்கு எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நாக்கின் நிறத்தின் அறிகுறியானது நம் உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கின்றது .இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது.

Exit mobile version