Site icon Tamil News

தினமும் பூண்டு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!

தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் .

நன்மைகள் ;
பூண்டில் ஆலசின் என்ற ரசாயனம் உள்ளது, இது உடலில் நைட்ரிக் ஆசிடை அதிகப்படுத்தும். இந்த நைட்ரிக் ஆசிட் தான் ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. அதனால் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும்போது பிளட் பிரஷர் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கப்படுகிறது.

குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க ப்ரொப்யாடிக் உணவுகள் தேவைப்படுகிறது. இது பூண்டில் அதிகம் உள்ளது. அதனால் நல்ல செரிமான சக்தி ஏற்படுகிறது.

நம் உடலில் பிரீ ரேடிக்கல்ஸ் செல்கள் வளர்வதை தடுக்கிறது .இந்த செல்கள் கேன்சர் போன்ற பெரிய வியாதிகளை வர வைக்க கூடும். பூண்டில் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி இன்ப்லோமெட்ரி பண்புகள் உள்ளது. இது செல்களை பாதுகாத்து ரேடிகல்ஸ் செல்களை அழிக்கிறது.

பூண்டில் விட்டமின் சி , விட்டமின் பி6 மற்றும் செலினியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளது .இது உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அதனால் அடிக்கடி சளி ,காய்ச்சல் போன்ற தொந்தரவு ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

பக்க விளைவுகள்;

பூண்டில் நன்மைகள் பல இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்திகிறது. ஒரு நாளைக்கு நாளில் இருந்து ஐந்து பூண்டு வரை எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு மேல் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், கல்லீரல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுகிறது.

மேலும் ரத்தப் போக்கையும் அதிகரிக்கச் செய்யும் அதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் முதல் ஒரு வாரத்திற்கு பூண்டை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் .அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்களும் குறைவான முறையில் எடுத்துக்கொள்ளவும்.

எனவே பூண்டின் மருத்துவ நன்மைகளைப் பெறவேண்டும் என்றால் நாள் ஒன்றுக்கு தேவையானதை மட்டும் சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

Exit mobile version