Site icon Tamil News

இலங்கையில் எரிபொருள் விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியம்!

இலங்கையில் எரிபொருளுக்கான விலை மேலும் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைப்  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடனும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இது குறித்து ஊகடங்களிடம் கருத்து வெளியிட்ட வலுசக்தி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

‘எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளதாகவும்,  அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் போட்டித்தன்மை அதிகரிக்கும் எனத் தெரிவித்த அவர்,  எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும். என்பதோடு,   தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களும் உருவாகும் எனவும் கூறினார்.

போதியளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டதன் பின்னர் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படும். மின் கட்டணம் தொடர்பிலும் நிச்சயம் விரைவில் சலுகைகள் வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

Exit mobile version