Site icon Tamil News

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பா?

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு 2 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் வீட்டில் ஹனியே கொல்லப்பட்டார்.

ஹனியே கொல்லப்பட்டதன் விளைவை ஊகிப்பது கடினம் என் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

9 மாதங்களாக நீடிக்கும் போருக்குச் சண்டை நிறுத்தம் மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வளவு காலம் பிடித்தாலும் அதற்கான முயற்சி தொடரும் என்று பிளிங்கன் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version