Site icon Tamil News

லண்டனில் அழகான தோற்றத்தை பெற ஆர்வம் காட்டும் மக்களுக்கு எச்சரிக்கை!

லண்டனில் அழகான தோற்றத்தை பெறுவதற்கும், இளமையாகத் தெரிவதற்கும் மக்கள் தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் இருக்கும் மருத்துவர் வின்சென்ட் வோங்கின் (Vincent Wong) மருந்தகத்தில் ‘Botox’, ‘Dermal fillers’ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அவற்றை நாடி வருவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றின்போது ஒருவர் முகத்தைப் பார்த்துப்பேசக் காணொளி அழைப்புகளை நம்பியிருக்கவேண்டியிருந்தது.

முகம் அப்போது பளிச்சென அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே அத்தகைய சிகிச்சைகளை பலர் நாடியுள்ளனர்.

அது தவிர, சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அந்தப் போக்கிற்குக் காரணமாகியிருக்கலாம். தோல் நிபுணர் வோங் முறையாகப் படித்துப் பட்டம் பெற்றவராகும்.

ஆனால் பிரித்தானியாவில் அத்தகைய சிகிச்சைகளை வழங்குபவர்களில் மூன்றில் ஒருவர் தகுதியில்லாமலேயே அவற்றைச் செய்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தவறான மருந்தைப் பயன்படுத்துவது, தோலில் தவறான ஆழத்தில் மருந்தைச் செலுத்துவது போன்ற பல ஆபத்துகள் அதனால் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version