Site icon Tamil News

இலங்கைக்கு வரும் காலம் கடினமாக இருக்கும் என எச்சரிக்கை!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்சியினால் அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் வரும் காலங்களில் கடினமான காலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதாவது தற்போது ரூபாயின் பெறுமதியில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசாங்கம், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது, கடனை திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளே கடினமான காலத்தை கொண்டுவரும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“இறக்குமதிகள் கட்டுப்பாடுகள் தளர்வு மற்றும் தேவை அதிகரித்தவுடன், ரூபாயின் மதிப்பு மீண்டும் குறையலாம் என கொழும்பில் உள்ள First Capital Holdings Plc இன் ஆராய்ச்சித் தலைவர் டிமந்த மேத்யூ கூறினார்.

ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் உயரும் போது ரூபாய் மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும் எனத் தெரிவித்த அவர்,  இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் கூடிய பொருட்களின் எண்ணிக்கை ஏற்கனவே 3,000 உச்சத்தில் இருந்து 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது, என்வும் கூறினார்.

Exit mobile version