Tamil News

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் வேண்டுமா? இந்தக் கீரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

நாம் தினமும் ஆரோக்கியமாக வாழ நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. அவ்வாறான இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை.

எமது உடலுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இயற்கை உணவுகளை உண்பது அவசியமாகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதனையே பரிந்துரை செய்திருக்கிறது.

அவ்வாறு பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை.

முருங்கையில் விற்றமின்-ஏ ஆனது கரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. விற்றமின் பி2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

விற்றமின் பி3 ஆனது நிலக்கடலை(கச்சான்)யில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் கல்சியம் பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் புரதச் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் மக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் எந்த வகையான கொடிய வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தியில் முருங்கை முதலிடம் வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் நம்மை எந்த வைரஸும் ஒன்றும் செய்ய இயலாது.

முருங்கைக்கீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரையை சூப் செய்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாககக் கிடைக்கிறது. ‘முருங்கைக்காய் உண்டால் கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.

 

Exit mobile version