Tamil News

கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள்

கண் பார்வையை மேம்படுத்த உதவும் உணவுகள்

1. வைல்ட் ரோஸ் டீ
கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது.

2. கொத்தமல்லி இலைகள்
கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.

3. கேரட்
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் கண் பார்வையை சீராக வைக்க உதவும்.

4. ப்ரோக்கோலி
கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.

5. மீன்
மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும்.

6. அவகேடோ அல்லது பட்டர் ப்ரூட்
கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ
லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ.

7. பெரிஸ்
இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ரோடாப்ஸின் சத்துக்கள் உடம்பில் புது செல்களை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வையை மேம்படுத்தும்.

கண்களை கழுவுங்கள்
காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள்.

இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள்.

Hakim suleman khan - want to improve Eyesight ! follow these Dietary tips:  1. Consume food that has enough nutrients and vitamins for your eyes. 2.  Green leafy vegetables, fish like salmon

கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்

வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.

Exit mobile version