Tamil News

சருமம் பொலிவு பெற வீட்டில் உள்ள இந்த பொருள் ஒன்றே போதும்!

பாசி பயறில் பொட்டாசியம்,  நார்ச்சத்து,  மெக்னீசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும்,  கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பாசி பயறு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அன்றாடம் பாசி பயறை உணவில் சேர்த்து வரலாம். பாசிபயிரை உணவில் சேர்த்துக்கொள்வதால் மட்டுமல்லாமல் உங்கள் சரும அழகு மேம்படவும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சரும பொலிவு மேம்படும்

பயறுகளில் இதுதான் பெஸ்டா..? உடல் எடையை குறைக்கும் முளைகட்டிய பாசிப்பயிறு, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது..!

பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள காப்பர்சத்து சருமத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பொலிவாக்குகிறது. மேலும் சருமத்தை பருக்கள்,  காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.

உடல் எடையைக் குறைக்க முடியும்.

உலகில் பெரும்பாலானோர் கவலைபடும் விஷயம் தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனைக் குறைக்கவும்,  உடல் எடையை சீராக பராமரிக்கவும்இ பாசி பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு காரணம் பாசி பயறு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருப்பது தான். எனவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பாசி பயறை சேர்த்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு

கர்ப்பிணிகள் பொதுவாக ஃபோலேட்டுகள் நிறைந்த உணவினை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு,  குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது.   ஃபோலேட்டுகள் பாசி பயறில்தான் அதிகமாக உள்ளன.

Exit mobile version