Tamil News

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படம் எப்போது வெளியாகவுள்ளது! படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 19, 2023 அன்று விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர உள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தில் ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார், மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

Exit mobile version