Tamil News

‘எஸ்கே22’ படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை இவரா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே21’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள ‘எஸ்கே21’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே22’ படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ‘எஸ்கே22’ படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version