Site icon Tamil News

ஏமனில் ஹவுதி படைகளைக் குறிவைத்து அமெரிக்கா- இங்கிலாந்து வான்வழி தாக்குதல்!

ஏமனின் உள்ள ஹவுதி படைகளைக் குறிவைத்து அமெரிக்கா- இங்கிலாந்து படைகள் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினரைக் குறிவைத்துப் போர் நடத்தி வருகிறது. 3 மாத காலமாக இந்த போர் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அதேபோல், ஈரான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் படைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஹமாஸூக்கு ஆதரவாகச் செங்கடல் வழியாகச் சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஏமனிலிருந்து இயங்கி வரும் ஹவுதி படை தாக்குதல் நடத்தியது. செங்கடல் சர்வதேச அளவிலான சரக்கு போக்குவரத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய வர்த்தகத்தில் 16 சதவீதத்திற்கும் மேல் செங்கடல் வழியாகத் தான் நடக்கின்றன. இதில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவான நாடுகளின் சரக்கு கப்பல்கள் பயணம் செய்து வருகின்றன. இவற்றின் மீதான தாக்குதல், சரக்கு போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, செங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் – இங்கிலாந்து படையினர் ஹவுதி படையினரைக் குறிவைத்துத் தாக்குதல் வான்வழி நடத்தினர். இதனைச் சற்றும் எதிர்பாராத ஹவுதி படைகள் பெரிதும் கலக்கமடைந்துள்ளன. உடனடியாக தற்காப்பு ஏற்பாடுகளையும், பதிலடிக்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளன.

இந்த தாக்குதல் சர்வதேச அளவில் புதிய பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. எந்த நேரத்திலும் ஹவுதி படைகள் பதில் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இனி தாக்குதல் தொடர்ந்தால், ஏமன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என எச்சரித்துள்ளனர.

Exit mobile version