Tamil News

சிங்கப்பூரை அடுத்து செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்க அரசும் அனுமதி அளித்துள்ளது.

விலங்குகளின் செல்களில் இருந்து உருவாக்கப்படும் செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்குமாறு இரு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாளுக்குநாள் உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி | Artificial Meat Is Allowed In The Us

இவ்வாறான நிலையில் பல்வேறு நாடுகளில் செயற்கை மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் , ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி அளிக்கக்கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Exit mobile version