Site icon Tamil News

(UPDATE) நொவா கக்கோவா பகுதியில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் 22000 மக்கள் : அவசர நிலை பிரகடனம்!

நொவா கக்கோவா அணை உடைந்துள்ளதை அடுத்து அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  அணை உடைப்பு Kherson மற்றும் அருகிலுள்ள கிரிமியாவில் குடிநீர் விநியோகத்தை சீர்குலைக்கலாம் எனவும்,    Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும்  கவலை வெளியிடப்பட்டுள்ளது.

நொவா கக்கோவா பகுதியில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் 22000 மக்கள்!

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அபாயம் எழுந்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 22000 பேர் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் இருப்பதாக மொஸ்கோவில் நிறுவப்பட்ட பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 80 குடியேற்றங்கள் ஆபத்தில் இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Dnipro ஆற்றின் மீது Kakhovka அணையைச் சுற்றியுள்ள பகுதிகளை வெளியேற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, உக்ரேனிய அதிகாரி ஒருவர் தண்ணீர் “முக்கியமான நிலையை” அடைய இன்னும் ஐந்து மணிநேரங்கள் மட்டுமே உள்ளன என்று எச்சரித்தார்.

அணையைச் சுற்றியுள்ள நீர்மட்டம் ஐந்து மீட்டர் உயர்ந்துள்ளது, பல கீழ்நிலை தீவுகள் ஏற்கனவே முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version