Site icon Tamil News

நீருக்கடியில் அமைக்கப்படும் சுரங்க பாதை : இரு ஐரோப்பிய நாடுகளை 07 நிமிடங்களில் அடைய முடியும்!

உலகின் மிகப் பெரிய சுரங்க பாதை நீருக்கடியில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. இந்த திட்டத்திற்காக £6.2bn பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. ஃபெஹ்மார்ன் பெல்ட் சுரங்கப்பாதை என அழைக்கப்படுகிறது.

இது உலகின் மிக நீளமான நீருக்கடியில் ரயில் போக்குவரத்தை இயக்கக்கூடிய  சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது.

பால்டிக் கடலின் கீழ் ஸ்காண்டிநேவியா மற்றும் மத்திய ஐரோப்பா இடையே நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாதையின் மூலம் தெற்கு டென்மார்க்கையும், வடக்கு ஜெர்மனியையும் வெறும் 07 நிமிடங்களில் அடைய  முடியும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் படகு மூலம் பயணிப்பதாயின் 45 நிமிடத்தில் பயண இடத்தை அடையமுடியும். இந்த சுரங்கப்பாதை போக்குவரத்து துறையின் பசுமை மாற்றத்திற்கும் பங்களிக்கும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

திட்டத்தின் செலவு ஆரம்பத்தில் £4.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டது, ஆனால் 2010 இல் டென்மார்க்-ஜெர்மன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து £6.2 பில்லியனாக உயர்ந்தது என்று ஜெர்மன் தளமான பண்ட் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version