Site icon Tamil News

​​உக்ரைனின் இழப்புகள் ரஷ்யாவை விட எட்டு மடங்கு அதிகம்: ரஷ்ய ஜனாதிபதி

​​உக்ரைனின் இழப்புகள் ரஷ்யாவை விட எட்டு மடங்கு அதிகம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீன ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். தூதரக அளவிலான அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனினும் போரானது நிற்காமல் தொடருகிறது.

உக்ரைன் ராணுவம் நேற்று சரமாரி டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உக்ரைன் ராணுவத்தினர் கீவ்வில் இருந்து சரமாரியாக டிரோன்களை செலுத்தினர்.

எனினும் உக்ரைன் ராணுவத்தின் டிரோன்கள் வருகையை அறிந்த ரஷ்ய வான்பாதுகாப்பு தளவாடங்கள் அதனை மறித்து எதிர்த்தாக்குதல் நடத்தின.

இந்த சம்பவத்தில் 25 க்கும் அதிகமான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தநிலையில் உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version