Site icon Tamil News

ஜெர்மனியின் டாரஸ் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குமாறு கோரும் உக்ரைன்!

டாரஸ் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குமாறு ஜெர்மனியிடம் உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது என  பெர்லினில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அது ஏவுகணைகளை வழங்கினால், ஜெர்மனி இங்கிலாந்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உக்ரைன் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதன்காரணமாக அமெரிக்கா ராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (ATACMS) ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மறுத்துள்ளது. இருப்பினும் உக்ரைன் குறித்த ஏவுகணையை பல மாதங்களாக கோரி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version