Site icon Tamil News

இங்கிலாந்தில் சீனாவுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் ( 29). இவர் தனது நண்பர் கிறிஸ்டோபர் பெர்ரியுடன் (32) இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து சீனாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின்கீழ் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர்கள் இருவரும் நேற்று லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த கோர்ட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதேசமயம் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

Exit mobile version