Tamil News

ரஷ்யாவுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் தொடர்பில் எகிப்து அழுத்தம்

உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.ஆனால் மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க ஊறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் முக்கியமான நாடு எகிப்து. ஆனால் தற்போது உணவு பண்டங்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது மேற்கத்திய நாடுகளின் கொள்கை தவறுகளின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள புடின்,உக்ரைனுடனான போருக்கு முந்தையது இந்த விவகாரம் என்றார். உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ரஷ்யா தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

Ukraine and Russia Sign Deal to Resume Grain Exports Amid Global Food  Crisis – NBC 5 Dallas-Fort Worth

உக்ரேனிய துறைமுகங்கள் மற்றும் தானிய கிடங்குகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுவீசி ஆயிரக்கணக்கான டன் தானியங்களை அழித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட வழிவகுத்தது.

இதனால் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த 20 மில்லியன் டன் தானியங்கள் சிக்கிக்கொண்டது. இது உலகமெங்கும் உணவு விலைகளை உயர்த்தியது, மேலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தானிய பற்றாக்குறையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.மட்டுமின்றி உக்ரைனிலிருந்து கணிசமான அளவு உணவை இறக்குமதி செய்த இந்த நாடுகளை கடுமையாக பாதித்தது என்றே கூறுகின்றனர்.

Exit mobile version