Site icon Tamil News

பண பந்தயத்திற்காக நடத்தப்பட்ட முச்சக்கரவண்டிப் போட்டி!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

பண பந்தயத்திற்காக நடத்தப்பட்ட முச்சக்கரவண்டிப் போட்டியை இரு இளைஞர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி முச்சக்கரவண்டிப் போட்டி இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிள்களில் போட்டியை வீடியோ எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு நல்லுருவ பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான உள் காயங்களினால் ஏற்பட்ட உபாதைகளினால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி பிரசான் விஜேதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .

Exit mobile version