Site icon Tamil News

டொலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸின் அரச பங்குகளை விற்க அனுமதி

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிலும் திறைசேரி செயலாளரிடம் உள்ள பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, திறைசேரி செயலாளரிடம் அந்தந்த நிறுவனங்களில் உள்ள பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும்லங்கா ஹாஸ்பிடல்ஸ் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களான ஸ்ரீலங்கா டெலிகொம்  மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஆகிய நிறுவனங்களில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த முடிவை கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவினால் இந்த விலகல் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஹொஸ்பிட்டலும்  இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொமின் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் 49.50% பங்குகளை திறைசேரி வைத்திருக்கிறது.

இதேவேளை, லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் பங்கு மூலதனத்தின் 51.34% பங்கு இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது.

 

Exit mobile version