Site icon Tamil News

ஆழ்கடலில் நடந்த துயரச் சம்பவம் – ஐந்து மீனவர்கள் உயிரிழப்பு

ஆழ்கடலில் வைத்து கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்து சுகவீனமடைந்த மீனவர் இன்று (30) இரவு இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் வணிகக் கப்பலில் இருந்து விஜயபாகு கப்பலுக்கு உடல் நலக்குறைந்த மீனவர் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் சடலம் எடுத்துச் செல்லப்பட உள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

டெவோன் 5 கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் சிங்கப்பூர் வணிகக் கப்பல் மூலம் இன்று (30) மீட்கப்பட்டனர். எனினும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட டெவோன் 05 என்ற பல்நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த ஆறு மீனவர்கள் கடலில் மிதந்த போத்தலில் இருந்த பொருளைக் குடித்து சுகயீனமடைந்ததுடன், அவர்களில் ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கப்பலின் தலைவர் 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் தில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித்குமார் ஆகிய 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த எதிர்பாராத சூழ்நிலையை அவர்கள் எதிர்கொண்ட போது, ​​இலங்கைக்கு தெற்கே தேவந்தரா முனையில் இருந்து சுமார் 365 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்கப்பல் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version