Site icon Tamil News

பிரான்ஸில் குழு மோதலினால் ஏற்பட்ட விபரீதம் – கொலை செய்யப்பட்ட நபர்

பிரான்ஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை Bobigny (Seine-Saint-Denis) நகரின் rue de Paris வீதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

காலை 9.30 மணி அளவில் பல்வேறு நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றடைந்த போது மோதலில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் தப்பி ஓடியிருந்தார்கள்.

இச்சம்பவத்தில் 40 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி ஒருவர் வாகனம் மூலம் குறித்த நபரை மோதி தள்ளியதாக அறிய முடிகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் குறித்த நபர் பலியாகியிருந்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் Seine-Saint-Denis நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Exit mobile version