Site icon Tamil News

ஸ்பெயினில் ஆச்சரியம் – ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்

பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன.

விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களளை ஸ்பெயினின் பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.

அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்துள்ளனர்.

இதன்மூலம் செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு பயன்படும் ஐவிஎஃப் சிகிச்சையை மிகக் குறைந்த கட்டணத்தில் மக்கள் பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version