Tamil News

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி! இலங்கை மத்திய வங்கி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஆகஸ்ட் 23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 317.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் விற்பனை விலை 245.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 421.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 403.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version