Site icon Tamil News

எடை இழப்பு குறித்த முயற்சியில் உயிரிழந்த டிக்டொக் பிரபலம்!

சீனாவில் தீவிர எடை இழப்பின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோசியில் மீடியாவில் பிரபலமாக இருக்கும் Cuihua  என்ற 21 வயதான குறித்த இளைஞர், தன்னை பின்தொடர்பவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் வகையில், தனது உடல் எடையை பாதியாக குறைப்பதற்கு முயற்சித்துள்ளார்.

இதற்காக சீனாவில் உள்ள தீவிர எடை இழப்பு முாகாமில் கலந்துகொண்ட அவர், உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி எடை இழப்பு குறித்தும், அவ்வாறான முகாம்கள் குறித்த பாதுகாப்பு அபாயங்களையும் எழுப்பியுள்ளது. இது தொடர்பான வாதங்கள் தற்போது சோசியல் மீடியாவில் எழுந்துள்ளன.

குய்ஹுவா தனது எடை இழப்பு பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து, டிக்டொக்கில் பல காணொலிகளை பதிவேற்றியுள்ளார்.   சமீபத்தில் அவர் 156 கிலோகிராம் எடையுடன் இருந்ததாகவும், தற்போது தனது எடையை 100 கிலோகிராமாக குறைக்க முயற்சிப்பதாக தனது வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குய்ஹுவா  தனது இலக்கை அடையும் முயற்சியில் பல்வேறு நகரங்களில் பல எடை இழப்பு முகாம்களில் சேர்ந்தார் என்றும்,  இரண்டு மாதங்களில் 27 கிலோகிராம் (60 பவுண்டுகள்) அதிகமாக இழந்ததாகவும் அவருடைய குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அவர் உயிரிழந்துள்ள நிலையில், எடையிழப்பு குறித்த கரிசனைகளும், எடை இழப்பு முகாம்கள் குறித்த கரிசனைகளும் எழுந்துள்ளது. இதனையடுத்து எடையிழப்பு முகாம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொதுவாக உடல் எடை என்பது அனைவரின் கனவாகவே இருக்கிறது. அதிக பருமன் கேலிக்கு உள்ளாகும் என்ற மனோநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version