Site icon Tamil News

276 நாட்களுக்குப் பிறகு சீன விண்கலம் பூமியில் தரையிறங்கியது!

276 நாட்கள் விண்வெளியில் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது.

இந்த ஆளில்லா விமானம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும்  இந்த ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version