Site icon Tamil News

100 பவுன் தங்கம் கொள்ளை மூன்று பேர் கைது

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனி பகுதி சேர்ந்த ராஜேஸ்வரி வயது 60.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அவருடன் அறிமுகமாகி பின்னர் இருவரும் தொழில் செய்து வந்து உள்ளனர்.

வர்ஷினி,தனக்கு தெரிந்த இடைதரகர்கள் எனக் கூறி அருண்குமார்,சுரேந்தர்,பிரவீன் என மூன்று பேரைக் ராஜேஷ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் வர்ஷினி மற்றும் அவருடன் பழகிய இடைத்தரகர்கள் ஆகியோர் உணவு அருந்துகின்றனர்.

பின்னர் ராஜேஷ்வரியை தூங்க வைத்து விட்டு வர்ஷினி இரவு 11 மணிக்கு வந்து இரண்டரை கோடி பணம் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு சென்றனர்.

பின்னர் காலை பீரோவை திறந்து பார்த்த ராஜேஷ்வரி நகை மற்றும் பணம் கொள்ளை அக்கப்பட்டதை அறிந்து, இராமநாதபுரம் காவல் நிலையித்தில் புகார் செய்த நிலையில்,

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவ்வழக்கில் குற்றவாளியான அருண்குமார், சுரேந்திரன்,பிரவீன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் திருவள்ளூர் மாவட்டத்தில் கைது செய்து உள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்து 33 லட்ச ரூபாய் பணம் மற்றும் 31 பவுன் நகை மீட்டு உள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகியோரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து கைது செய்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version