Site icon Tamil News

இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் கவலை! !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்  வாக்கர் டர்க், பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவிக்கிறார்.

இணையவழி பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம், இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வில் உரையாற்றிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டங்களால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை மற்றும் மக்களின் வருமான மட்டத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் திரு.துர்க் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து விசாரணை செய்வதற்கு நம்பகமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறும், உண்மையான நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்  வாக்கர் டர்க் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version