Site icon Tamil News

மூன்று மாகாண ஆளுநர்களை பதவிநீக்கினார் ஜனாதிபதி!

மூன்று மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (மே 15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய ஆளுநர்கள் புதன்கிழமை (மே 17) நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  .

Exit mobile version