Site icon Tamil News

உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைக்க ஜனாதிபதி உறுதி!

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த  மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தாலும், அதை ஆய்வு செய்வதற்கு மத்திய ஆய்வு மையம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, இந்த முயற்சியில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்தை தாமதப்படுத்தியதே தவிர, அதை நிறுத்தவில்லை என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் முன்னோடிகளாக பாடசாலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை பரப்புமாறு வலியுறுத்திய ஜனாதிபதி,  சுற்றாடல் பைலட்டாக இருப்பது குறிப்பிடத்தக்க தியாகம் என்றும் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Exit mobile version