Site icon Tamil News

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி திறன் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்!

விக்டோரியா நீர்த்தேக்கத்தை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தினால் அதன் உற்பத்தி திறன் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என அனல்மின் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்ட உயரம் கடல் மட்டத்திலிருந்து 438 மீட்டர் ஆகும்.

ஆனால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவும் குறைந்துள்ளதால், தற்போது நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 409.7 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அதிகபட்ச நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 380 மீட்டருக்கு மேல் இருந்தால் மட்டுமே நீர்த்தேக்கத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

அண்மைய நாட்களில் மின்சார உற்பத்திக்காக 01 கிகாவாட் மணித்தியாலத்திற்கும் குறைவான நீரே விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழந்ததன் காரணமாக நீர்த்தேக்கத்திலிருந்து உற்பத்திக்காக 6.5 மில்லியன் கனமீற்றர் நீர் வெளியேற்றப்படவுள்ளது.

பற்றாக்குறையை நிரப்பும் வகையில்  முதல் 2.5 கிகாவாட் மணிநேர மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version